மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: எச்.ராஜா மதவாதம் மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை ராயபுரம் சட்டமன்ற அலுவலகத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இதை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்து, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு கையேடு மற்றும் சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.இந்த மையம் துவங்கியவுடனே 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசுக்கு ₹17 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பாஜ தலைவர்கள், மத்தியில் அவர்களது ஆட்சி நடப்பதால், தமிழக அரசுக்கு மேலும் ₹6 ஆயிரம் கோடி வாங்கி கொடுத்தால், நிதி பற்றாக்குறை ஓரளவு குறையும்.

ஜிடிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வந்தால், நாம் மத்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டும். இதனால் அதிகளவு வரி வருவாய் இழப்பு ஏற்படும்.தமிழகத்தில் மதவாத கட்சிகள் ஒருபோதும் கால் ஊன்ற முடியாது. பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா மதவாதம் மற்றும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். அவர்மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: