கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சி: 21 எம்எல்ஏ.க்கள் பலம் உள்ளதாக உறுதி

பனாஜி: கோவா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 21 எம்எல்ஏ.க்கள் பலம், தனக்கு இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கோவாமுதல்வர் மனோகர் பாரிக்கர், கல்லீரல் பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், கோவாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர காங்கிரஸ் முயற்சிக்கிறது. இம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று முன்தினம் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர். பாஜ தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதனிடையே நேற்று காங்கிரசின் சட்டப்பேரவை கட்சி தலைவர் சந்திரகாந்த் கவ்லேகர் நிருபர்களை சந்தித்தார். அப்போது சந்திரகாந்த் கூறுகையில், “ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்எல்ஏ.க்கள் பலம் காங்கிரசிடம் உள்ளது. நாங்்கள் யாருடன் ஆலோசனை நடத்தியுள்ேளாம் என்பது குறித்து வெளிப்படையாக கூற முடியாது. ஆனால்,  எங்களிடம் 21 எம்எல்ஏ.க்களின் பலம் உள்ளது. ஆளுநரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். ஆளும் பாஜ அரசின் மீது அதிருப்தி நிலவி வருகிறது. மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை, காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: