கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு ஜலந்தர் பிஷப்பிடம் தொடர்ந்து ஏழு மணி நேரம் விசாரணை: இன்றும் நடக்கிறது

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி  பலாத்கார வழக்கில் ஜலந்தர் பிஷப் பிராங்கோவிடம் நேற்று எர்ணாகுளம் குற்றப்பிரிவு எஸ்பி அலுவலகத்தில் தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடந்தது. இன்றும் அவரிடம் விசாரணை  நடக்க உள்ளது.கேரள மாநிலம் குரவிலங்காட்டைச் சேர்ந்த  கன்னியாஸ்திரியை ஜலந்தர் பிஷப் பிராங்கோ பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட  புகார் விவகாரத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. இந்த வழக்கில்நேற்று காலை 10  மணிக்கு விசாரணைக்கு ஆஜராக பிஷப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் 10 மணிக்கு அவர் ஆஜராகவில்லை. 11 மணியளவில்  பிஷப் பிராங்கோ குற்றப்பிரிவு எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். உடனடியாக  கோட்டயம் எஸ்பி ஹரிசங்கர் மற்றும் வைக்கம் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் விசாரணை தொடங்கியது. மாலை 6 மணிவரை தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடந்தது. முதல் கட்டமாக 104 கேள்விகள் ேகட்கப்பட்டன.  இதற்கு அவர் பதிலளித்தார். விசாரணை முடிந்து மாலை 6 மணியளவில் பிஷப் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் தனது காரில் புறப்பட்டு சென்றார். அப்போது வெளியே குவிந்திருந்த இந்திய கம்யூ., தொண்டர்கள் கருப்புக்  கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.விசாரணை குறித்து கோட்டயம் எஸ்பி ஹரி சங்கர் கூறியதாவது: விசாரணைக்கு பிஷப் பிராங்ேகா முழு ஒத்துழைப்பு அளித்தார். இன்றும் விசாரணை நடக்கும். காலை 11 மணிக்கு மீண்டும் ஆஜராகவேண்டும் என்று அவரிடம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஷப்பை ைகது செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. விசாரணை முடிந்த பின்னர்தான் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். பிஷப் பிராங்கோவிடம்  கொச்சி    திருப்பூணித்துறாவில் உள்ள குற்றப்பிரிவு எஸ்பி அலுவலகத்தில் வைத்து  விசாரணை  நடத்தப்பட்டது. இந்த விசாரணை அரங்கம் அதிநவீன  முறையில்  அமைக்கப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: