பாகிஸ்தான் ராணுவம் வெறிச்செயல் கழுத்தை அறுத்து இந்திய வீரர் கொலை: காஷ்மீர் எல்லையில் வெறிச்செயல்

ஜம்மு: காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய வீரரை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் பாகிஸ்தான் ராணுவம் படுகொலை செய்துள்ளது. இதனால், எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.காஷ்மீர் மாநிலத்தில் ராம்கார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு,  சர்வதேச எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தலைமை  காவலர் நரேந்திர குமார் என்பவர் திடீரென காணாமல் போனார், அவரை இந்திய வீரர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சர்வதேச எல்லை பகுதி என்பதால், அவரை தீவிரவாதிகள் கடத்தி சென்றிருக்கலாம் என  சந்தேகிக்கப்பட்டது. இதனால், அவரை கண்டுபிடிக்க உதவும்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம்  வேண்டுகோள் விடுத்தது. ஆனால், குறிப்பிட்ட தூரம் மட்டுமே வந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், அப்பகுதியில்  அதிகளவில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் இதற்கு மேல் தேட முடியாது என கூறி சென்று விட்டனர்.

 இது தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பிஎஸ்எப் வீரர் நரேந்தர் குமாரின் உடல், கழுத்து அறுக்கப்பட்டு, உடலில் 3 குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. சர்வதேச எல்லை பகுதியில் வளர்ந்துள்ள ராட்சத யானைப்புற்களுக்கு நடுவில் அவருடைய சடலம் கிடந்தது. அந்த பகுதியில் இந்திய வீரர்கள் நுழைத்தால், பாகிஸ்ான் ராணுவம் தாக்குதல் நடத்தும் அபாயம் நிலவியதால்,  துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவத்திடம்  வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், 6 மணி நேரமான பிறகும் அவர்களிடம் இருந்து முறையான பதில் வரவில்லை.

இதையடுத்து, இரவு நேரம் ஆனதும் பிஎஸ்எப் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி, வேலிக்குள் வீசப்பட்டு கிடந்த வீரர் நரேந்திர குமாரின் உடல் நேற்றுமுன் தினம் இரவு மீட்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதல் குறித்து பாகிஸ்தான்  ராணுவத்திடம் பிஎஸ்எப் புகார் அளித்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.சர்வதேச எல்லையில் இந்திய வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருப்பது, ராணுவத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ராணுவத்தில் வலுத்து  வருகிறது. அதேபோல், பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்திய வீரரின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய வீரரின் படுகொலையை கண்டித்து ஜம்முவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: