×

வேறு சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் ஆத்திரம் நடுரோட்டில் மகள், மருமகனை வெட்டி கொல்ல முயன்ற தந்தை: ஐதராபாத்தில் மீண்டும் பயங்கரம்

திருமலை: ஐதராபாத்தில் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் பெற்ற மகள், மருமகனை தந்தை சரமாரியாக வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், ஐதராபாத் எர்ரகட்டா  பகுதியைச் சேர்ந்தவர்கள் மாதவி, சந்தீப். இவர்கள், இருவருக்கும் இடையே அங்குள்ள கல்லூரியில் படித்தபோது காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு  செய்தனர். வேறுவேறு சாதியைச் சேர்ந்த இருவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இதனால் மாதவியின் தந்தை மோகனாச்சாரி கடும் ஆத்திரத்தில் இருந்தாராம். நேற்று எர்ரகட்டாவில் உள்ள  போரகொண்டா என்ற இடத்தில் மாதவியும் சந்தீப்பும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்திறங்கிய  மோகனாச்சாரி கத்தியால் சந்தீப்பை சரமாரியாக வெட்டினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து தடுக்க வந்த மகள் மாதவியையும், மோகனாச்சாரி கண்மூடித்தனமாக வெட்டினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மோகனாச்சாரியை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் கத்தியை காட்டி  மிரட்டி பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச்ெசன்றனர்.  கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாதவியையும், சந்தீப்பையும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாதவியின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல்சிகிச்சைக்காக  மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து எஸ்ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மோகனாச்சாரியை வலைவீசி தேடி வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்கொண்டா மாவட்டம், மிரியாலகூடாவில்  5 மாத கர்ப்பிணியான அமிர்தவர்ஷினி கண்ணெதிரே அவரது தந்தை  அனுப்பி வைத்த ரவுடி கும்பலால் கணவர் பிரனாய்  வெட்டிக் கொல்லப்பட்டார்.  தற்போது  மாதவி மற்றும்  சந்தீப்பை கொல்ல முயன்ற சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : else's,jubilee, fathe,son-in-law, Hyderabad
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...