ரயில்வே ஊழியர்கள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வாசன் கோரிக்கை

சென்னை: ரயில்வே ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நம் நாட்டில் ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால் ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, அவுட் சோர்சிங் முறையை கைவிடுவது, சென்னை, பெரம்பூரில் உள்ள எலக்ட்ரிக்கல் ஒர்க் ஷாப்பை மூடும் முயற்சியை கைவிடுவது, குறைந்த பட்ச சம்பளம் ரூ.28,000 வழங்குவது, சேப்டி கேட்டகிரியில் உள்ள 2.5 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். பெண் தொழிலாளிகளின் சிசிஎல் விடுமுறைக்கு நிபந்தனை விதிக்கக்கூடாது. 530 சப்ஸ்டிடியூட்டுகளை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் போராடி வருகிறார்கள். இதனை மத்திய பாஜ அரசு மிக முக்கிய பிரச்னையாக கவனத்தில் கொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசும் ரயில்வே ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: