சுகாதாரத்துறையின் புதிய உத்தரவால் சிக்கல்: தமிழகத்தில் 20,000 லேப் மூடல்? 50,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

சென்னை: தமிழக சுகாதாரத்துறையின் புதிய உத்தரவால், மாநிலம் முழுவதும் 50,000 ஆய்வக உதவியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 20,000 லேப்களை மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு, மாநிலம் முழுவதும் ஒரே விதமான தரமான மருத்துவம் என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும்  தனியார் எக்ஸ்ரே, ஸ்கேன், நர்சிங் ஹோம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ ஆலோசனை மையங்கள், கிளினிகல் லேப் உள்ளிட்டவை அரசிடம் முறையாக பதிவு பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், மருத்துவ ஆய்வக அறைகள், முதலுதவி சிகிச்சை அறைகள 500 சதுர அடி அளவில் இருக்க வேண்டும். நகர்ப்புறங்களில 700 முதல் 1500 சதுர அடியாக இருக்க வேணடும் போன்ற விதிமுறைகளை அமல்படுத்தியது. ஏற்கனவே உள்ள மருத்துவ ஆய்வகங்கள் தமிழக அரசின் புதிய விதிமுறைகளின்படி கட்டமைக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் இந்தாண்டு இறுதிக்குள் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்குள்ளாக, மருத்துவ அறைகளை மாற்றியமைத்து, அரசிடம் பதிவு பெற வேண்டும். புதிதாக தொடங்கப்படும் ஆய்வுக்கூடங்கள், மருத்துவமனைகளுக்கு 6 மாதம் வரையில் கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு விதித்துள்ள புதிய விதிமுறைகளின்படி, எந்தவொரு ஆய்வகமோ, மருந்தகமோ இல்லை. மேலும், ஆய்வக உதவியாளர்கள் டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால், தற்போது ஆய்வகங்களில் பணிபுரிவோர்கள் தொழில் சார்ந்த அனுபவம் மட்டும் பெற்றவர்களாக உள்ளனர். ஆனால், அரசு கூறியபடி படிப்பை முடிக்கவில்லை. இதனால், மாநிலம் முழுவதும் 20,000 லேப்களை மூட வாய்ப்புள்ளதாகவும், 50,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: