கோதையாறு நீர் மின் நிலையம் 2 முடங்கியது: வீணாகும் தண்ணீர்...அதிகாரிகள் கவனிப்பார்களா?

குலசேகரம்: தமிழக மின்வாரியம் மின் உற்பத்திக்கு காற்றாலைகளையே அதிகமாக நம்பி உள்ளது. ஆனால் இந்த காற்றாலைகளின் மூலம் குறிப்பிட்ட சீசன் மட்டுமே போதுமான அளவு உற்பத்தி கிடைக்கிறது. மற்ற நேரங்களில் நீர்மின்நிலையங்கள், அணுமின் நிலையங்களை நம்பி இருக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் காற்றின் வேகம் வெகுவாக குறைந்துள்ளது. மின் உற்பத்தியும் நாளுக்கு நாள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தற்ேபாதைய நிலையில் மின் உற்பத்திக்கு, தமிழக அரசு நீர்மின்நிலையங்களையே அதிக அளவில் நம்பி இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கோதையாறு நீர்மின் நிலையங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. 1968ல் செயல்படுத்தப் பட்ட கோதையாறு நீர்மின் நிலைய திட்டம் 1ல் இருந்து 60 மெகாவாட் உற்பத்தியும், கோதையாறு நீர்மின்நிலைய திட்டம் 2ல் இருந்து 40 மெகாவாட் மின்சாரம் என்று, தினமும் 100 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 4165 அடி உயரத்தில் அப்பர் கோதையாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு கோதையாறு நீர்மின்நிலையம் 1 இயக்கப்படுகிறது.

அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் 110 அடி உயரம் உள்ள கீழ் கோதையாறு அணையில் ேதக்கி வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அதிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தண்ணீர், குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு நீர்மின் நிலையம் 2 இயக்கப்படுகிறது. இதன் மூலம் 40 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நீர்மின் நிலையம் 2ல் இருந்து உற்பத்தி போக எஞ்சிய தண்ணீர் பேச்சிப்பாறை அணைக்கு வந்து சேருகிறது. குமரி மாவட்டத்தின் கனவு திட்டங்களில் ஒன்றான இந்த நீர்மின் நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படவில்ைல என தெரிகிறது. ஆகவே தற்போது அடிக்கடி பழுது ஏற்படும் நிலை உள்ளது. நீர்மின் நிலையம்1, நீர்மின் நிலையம் 2 என அவ்வப்போது மாறி மாறி பழுதாகி மாதக்கணக்கில் மூடி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் நீர்மின்நிலையம் 1ல் ஏற்பட்ட  பழுதால் அதன் உற்பத்தி சரிந்து போய் உள்ளது.

அதில் பராமரிப்பு பணிகள் பல முறை செய்தும், அதன் முழு உற்பத்தி திறனை எட்டமுடியவில்லை. தற்போது 30 முதல் 40 மெகாவாட் மட்டுமே மின்உற்பத்தி செய்யப்படுகிறது. அப்பர் கோதையாறு அணைகளில் உள்ள நீர், மின் உற்பத்திக்காக கட்டப்பட்டுள்ள அணைகள் ஆகும். இங்குள்ள தண்ணீர் மின்உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் வீணாகாமல் இருப்பதற்காக 2 மின்நிலையங்களும் ஒன்றாக இயக்கும் நேரத்தில் மட்டுமே உற்பத்தி நடைபெறும். இதில் எதாவது ஒன்று பழுதாகினாலும் உறபத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இதனால் தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நீர்மின் நிலையம் 2ல் திடீர் பழுது ஏற்பட்டது. மின்உற்பத்தி இயந்திரத்தில் இருந்த காயல்கள் நாசமானது. இதனால் நீர்மின் நிலையம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

 நீர்மின் நிலையம் 1ல் இருந்து இயங்கி வெளியேறும் நீர் வீணாகி விடும் என்பதால், நீர்மின் நிலையம் 2ம் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது கடும் வெயில் நிலவி வருவதாலும், காற்றாலை உற்பத்தி குறைந்து இருப்பதாலும்  மின்சார தேவை அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மின்பற்றாக்குறை நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க கோதையாறு நீர்மின்நிலையம் 2 பழுதாகி உள்ள நிலையிலும், நிர்மின்நிலையம் 1 இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர்மின்நிலையம் 1ல் இருந்து மிகுதியாகி வெளியேறும் தண்ணீர் பேச்சிப்பாறை அணைக்கு செல்கிறது.  சுமார் ஒரு மாதகாலமாக இந்த நிலை நீடித்து வருவதால், மின்வாரியத்திற்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில் வரும் காலங்களில் பருமழை பெய்ய தவறினால், தண்ணீர் இவ்வாறு வீணாகி செல்வதால் அது மின்உற்பத்தியை வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே வெகு சீக்கிரத்தில் நீர்மின்நிலையம் 2ஐ சரிசெய்து தண்ணீர் வீணாகாமல் மின்சார உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோதையாறு மின்உற்பத்தி நிலையங்களில் பழுது என்பது தொடரும் சம்பவங்களாக உள்ளது. ஒரு ஆண்டில் பல மாதங்கள் முடங்கி போய் விடுவது வழக்கமாக உள்ளது. காற்றாலைகளில் உற்பத்தி இல்லாத நேரத்தில் தமிழக மின்வாரியத்திற்கு கை கொடுக்கும் இந்த மின் நிலையங்களை முறையாக பராமரிக்காததால் அடிக்கடி இந்த நிலை  ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் அலட்சியம்: கோதையாறு நீர்மின்நிலையங்களில் சிறிது பழுதுகள் ஏற்படும்போது அதனை சரிசெய்வதற்கு அதற்குரிய தொழில் நுட்ப திறன் கொண்ட  நிறுவனங்களை நாடுவது இல்லை என கூறப்படுகிறது. மேலும் கமிஷன் அடிக்கும் நோக்கில் லெட்டர் பேர்டு நிறுவனங்களை நாடி செல்வதால் பழுது என்பது தீராத ஒன்றாக உள்ளது.  கோதையாறு நீர்மின் நிலையங்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் இங்குள்ள தண்ணீர் வளத்தை பயன்படுத்தி அதிகளவு மின்உற்பத்தி செய்வதற்கு வழிமுறைகள் இருந்தும் மின்உற்பத்தியை பெருக்குவதற்கும்,

எந்த வித வளர்ச்சி திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் உள்ளனர். மேலும் அனுபவம் வாய்ந்த பொறியாளர்களை பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு சரியாக பயன்படுத்தாமல் உள்ளனர் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் கோதையாறு நீர்மின்நிலையங்களின் உற்பத்தி திறன் குறைந்து விரைவாக முழுமையாக முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இங்குள்ள நீர் வளங்களுக்கு ஏற்ப நவீன திட்டங்களை செயல்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்ைக எடுப்பதோடு, கோதையாறு நீர்மின்நிலையங்களை புதிய தொழில் நுட்ப முறையில் நவீனப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: