மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சைகைமொழி, பிரெய்ல்களை பாடமாக்க சிபிஎஸ்இ திட்டம்

டெல்லி: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குச் சைகைமொழி, பிரெய்ல் ஆகியவற்றைப் பாடமாக வைக்க சிபிஎஸ்இ திட்டமிட்டு வருகிறது. மாற்றுத் திறனுள்ள மாணவர்களுக்காகப் பாடத் திட்டத்தில் சீர்திருத்தங்களைச் செய்ய சிபிஎஸ்இ  பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகச் சைகைமொழி, பிரெய்ல் ஆகியவற்றைப் பாடமாக வைக்கவும், கணினிமுறைத் தேர்வு, வருகையில் தளர்வு ஆகியவற்றைக் கொண்டுவரவும் சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சீரான கல்வி முறையைக் கொண்டுவருவது பற்றிக் கலந்துபேசுவதற்காக இருபது கல்வி வாரியங்கள், தேசியக் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி நிறுவனம், தேசியத் திறந்தவெளிப் பள்ளி, இந்திய மறுவாழ்வுக் கவுன்சில், சமூக நீதி அமைச்சகம், நேசனல் புக் டிரஸ்ட் உள்ளிட்ட 46 அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சிபிஎஸ்இ அழைப்பு விடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: