×

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் சிறை தண்டனை நிறுத்திவைப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் சிறை தண்டனையை இஸ்லாமாபாத் ஐகோர்ட் நிறுத்திவைத்தது. ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிப்புக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. நவாஸ் மகள் மரியமின் தண்டனையையும் நிறுத்திவைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது. வெளிநாட்டில் சொத்து வாங்கினார்கள் என்பது நவாஸ் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஊழல் புகாரில் நவாஸ் ஷெரீப்புக்கு 11 ஆண்டும், மகள் மரியமுக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. மருமகன் சபாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது.  

முன்னதாக ஊழல் வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப்க்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில், வெளிநாடுகளில் பணம் பதுக்கியுள்ள உலகத்தலைவர்கள் பற்றிய பல்வேறு ஆவணங்களை வெளியிட்டது. இதில், பாகிஸ்தானின் அதிபரான நவாஸ் ஷெரிப், ஊழல் பணத்தில் லண்டனில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து  இந்த ஊழல் புகார் தொடர்பாக சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம், அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள் பலரிடமும் விசாரணை நடைபெற்றது.

மேலும், இந்த வழக்கின் காரணமாக, கடந்த 2017 ஆம் ஆண்டு நவாஸ் ஷெரிப், பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், நவாஸ் ஷெரிப்பின் மீதான ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு  11 ஆண்டுகள் சிறை தண்டனையும், வழக்கு விசாரணையில் சரிவர ஒத்துழைப்புத் தராததற்காக ஓராண்டு சிறைதண்டனையும் நவாஸ் ஷெரிப்புக்கு விதிக்கப்பட்டது. அவரது மகள் மரியத்துக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், வழக்கில் ஒத்துழைக்காததற்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Former Prime Minister, Nawaz Sharif, prison
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...