புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதிவழங்காமல் நிறுத்திவைக்கக் கோரி ஜப்பான் அரசுக்குக் குஜராத் விவசாயிகள் கடிதம்

மும்பை: புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதிவழங்காமல் நிறுத்திவைக்கக் கோரி ஜப்பான் அரசுக்குக் குஜராத் விவசாயிகள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கடிதம் எழுதியுள்ளனர். மும்பை - அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில்பாதை அமைத்துப் புல்லட் ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஜப்பான் அரசு ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இந்தத் திட்டத்துக்காக மகாராஷ்டிரத்தில் ஆயிரத்து 120 எக்டேர் நிலமும், குஜராத்தில் ஆயிரத்து நானூறு எக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்படுவதாக கூறி குஜராத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஜப்பான் அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியளிப்பதற்கான நிபந்தனைப்படி சமூகத் தாக்க மதிப்பீடு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆகியவற்றைப் புதிதாகத் தயாரிக்காததைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் திட்டத்துக்கு நிதி வழங்காமல் நிறுத்தி வைக்கக் கோரியுள்ளனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: