அமெரிக்கா வடக்கு கரோலினாவில் பெய்து வரும் மழையால் வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் பெய்து வரும் கன மழையால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கரோலினா பகுதியில் இருந்து ஏராளமானோர் நிவாரன முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வடக்கு கரோலினாவில் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கேடுத்து ஓடுகிறது.

ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் நிலைமை சீரமையாமல் உள்ளது. மழை நீடிக்கும் என வானிலை நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். முகாமில் தங்கியுள்ள மக்கள் அனைவருக்கும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: