சொகுசு ஹெலிகாப்டர்கள் முறைகேடு வழக்கில் மைக்கேலை இந்தியாவில் விசாரிக்க துபாய் நீதிமன்றம் உத்தரவு

துபாய்: ஆகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவிற்கு கொண்டு சென்று விசாரிக்க துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 12 நவீன ஹெலிகாப்டர்கள் வாங்க கடந்த 2007 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இத்தாலி நிறுவனத்துடன் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இந்திய விமானப் படையின் முன்னாள் தலைவர் எஸ்.டி.தியாகி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகர் மைக்கேலை கடந்த ஆண்டு துபாயில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் மைக்கேலை இந்தியா அழைத்து வந்து விசாரிக்க துபாய் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஓராண்டிற்கு மேலாக நீடிக்கும் விசாரணையை அடுத்து மைக்கேலை இந்தியா கொண்டு செல்ல துபாய் நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: