3 தொடரில் இருந்து விலகினார் ஷரபோவா

மாஸ்கோ: முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா காயம் காரணமாக 3 டென்னிஸ் தொடர்களில் இருந்து விலகியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஷரபோவா (31 வயது, ரஷ்யா), நடப்பு சீசனில் தொடக்கத்தில் முழு உடல்தகுதியுடன் களமிறங்கி ஓரளவு குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றார். ரோம் சர்வதேச டென்னிஸ் தொடரின் அரை இறுதி வரை முன்னேறிய அவர், பிரெஞ்ச் ஓபன் மற்றும் மாட்ரிட் ஓபன் தொடர்களில் கால் இறுதி வரை முன்னேறினார்.

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரிலும் கூட 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். தற்போது உலக தரவரிசையில் 24வது இடத்தில் உள்ள ஷரபோவா சீன ஓபன், டியான்ஜின் ஓபன், மாஸ்கோ கிரெம்ளின் கோப்பை ஆகிய 3 தொடர்களில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் நடப்பு டபுள்யு.டி.ஏ சீசனில் அவரது சவால் முடிவுக்கு வந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: