சில்லி பாயின்ட்...

* சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தய சுற்றில் விளையாட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். ஜப்பானின் சயேனா கவாகமியுடன் நேற்று மோதிய சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நெஹ்வால் 22-20, 8-21, 14-21 என்ற செட் கணக்கில் கொரியாவின் சுங் ஜி ஹியுனிடம் போராடி தோற்றார்.

* உலக ,மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதி போட்டியில் பங்கேற்க நட்சத்திர வீராங்கனை பிங்கி தவறியதை அடுத்து, அவருக்கு பதிலாக மகளிர் 53 கிலோ எடை பிரிவில் பங்கேற்க ரித்து போகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

* இருதரப்பு தொடர்களில் விளையாட மறுப்பது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிச்சிஐக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் தங்கள் தரப்பு சார்பில் வாதாடுவதற்காக இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் இயான் மில்ஸை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: