நெருங்குகிறது பண்டிகை சீசன் : தங்கம் விலை அதிகரிக்குமா?

 கடந்த மாதம் மட்டும் தங்கம் இறக்குமதி 93 சதவீதம் உயர்ந்துள்ளது.

 ரூபாய் மதிப்பு வலுப்பெற தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்.

 கடத்தல் தங்கம் ஊடுருவலாம் என்பதால், இறக்குமதி வரியை உயர்த்த தயக்கம்

புதுடெல்லி: தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த புதிய கொள்கை முடிவுகளை மத்திய அரசு எடுக்க இருக்கிறது. இதனால், பண்டிகை சீசனில் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. இது கச்சா எண்ணெய் இறக்குமதியில் தொடங்கி பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இறக்குமதி செலவு அதிகரிப்பு, நடப்பு கணக்கு பற்றாக்குறை என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 6 சதவீதம் அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. நேற்று ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவாக ₹72.99ஆக சரிந்து முடிவில் ₹72.98க்கு நிலை பெற்றது.

 ரூபாய் மதிப்பை பொறுத்தவரை வெளிநாடுகளுடனான வர்த்தகம் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இறக்குமதி இல்ைல. கடந்த நிதியாண்டில் மொத்த இறக்குமதி 45,900 கோடி டாலராக இருந்தது. ஆனால் மொத்த ஏற்றுமதி 30,200 கோடி டாலர் மட்டுமே. அதிக அளவு இறக்குமதியாவது கச்சா எண்ணெய்தான். இதற்கு டாலரில்தான் பணம் செலுத்த வேண்டும். இந்த வர்த்தக பற்றாக்குறைதான் டாலர் மதிப்ைப வலுவடைய செய்து ரூபாய் மதிப்பு சரிய மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

 இதுபோல், தங்கம் இறக்குமதி அதிகம் இருந்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. தங்கம் இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் தங்கம் இறக்குமதி 41 சதவீதமும், ஆகஸ்ட் மாதத்தில் 93 சதவீதமும் அதிகரித்திருக்கிறது. தீபாவளி உட்பட பண்டிகை சீசன்கள் அடுத்தடுத்து வர உள்ளதால் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும். இது இறக்குமதிைய அதிகரிக்கவே செய்யும்.வழக்கமாக தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த வரியை உயர்த்துவதுதான் வழக்கம். ஆனால், வரி உயர்வதால் தங்கம் கடத்தல் அதிகரித்து விடுகிறது. தற்போது தங்கம் இறக்குமதி வரி 10 சதவீதமாக உள்ளது. தற்போதும், தங்கம் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் மீதான வரியை உயர்த்துவது பற்றி நிதியமைச்சகம் பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகின.ஆனால், மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இறக்குமதியை அதிகரித்தால் தங்கம் கடத்தல் அதிகரித்து விடும். எனவே, இறக்குமதி வரி அல்லாமல் மாற்று வழியில் தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 2013 ஆகஸ்டில் தங்கம் இறக்குமதியை குறைக்க 80:20 திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது, தங்க வர்த்தகர்கள் தாங்கள் ஏற்கெனவே இறக்குமதி செய்த தங்கத்தில் 20 சதவீதம் நகையாக ஏற்றுமதி செய்தால்தான் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கும். இந்த திட்டம் நவம்பர் 2014ல் ரத்து செய்யப்பட்டது. இதுபோல் புதிய கொள்கை முடிவு எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

 பண்டிகை சீசனில் தங்க நகைகளுக்கு தேவை அதிகமாக இருக்கும். இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டால் தேவை அதிகரித்து நகை விலை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்பட பெட்ரோலும், தங்கமும்தான் முக்கிய காரணம். இதற்கு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும்; ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று நகை தொழில் துறை சார்ந்த நிபுணர்கள் ஆலோசனை கொடுத்தார்கள். அதை அவர்கள் பரிசீலனை செய்து ஓரளவு ஏற்றுக்கொண்டுள்ளனர். இறக்குமதியை கட்டுப்படுத்த வரியை உயர்த்த வேண்டும் எனவும் கூறினர். ஆனால், வரியை உயர்த்தினால் தங்கம் கடத்தல் அதிகரிக்கும் என அதை தவிர்க்கின்றனர். எனவே, வரியை உயர்த்துவதற்கு சாத்தியமில்லை. அதேநேரத்தில், ரூபாய் மதிப்பில் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மதிப்பு சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு குறையாதவரை தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: