20,000 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்கள் மீது மீண்டும் வரி விதிப்பு : அமெரிக்கா அதிரடி

வாஷிங்டன்: சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போட்டி தீவிரம் அடைந்து வருகிறது. வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்ட சீன பொருட்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து வரி விதித்து வருகிறது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கிறது. இந்நிலையில், மேலும் 20,000 கோடி மதிப்பிலான (₹14.4 லட்சம் கோடி) சீன பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது.  இது வரும் 24ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. மின்னணு பொருட்கள், சீன கடல் உணவுகள், மரப்பொருட்கள், விளக்கு, டயர், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள் ஆகியவை இதில் அடங்கும். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து இது 25 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த ஆண்டு சீன பொருட்கள் மீது அமெரிக்கா ஜூலை மாதம் 3,400 கோடி டாலர் மற்றும் கடந்த மாதம் 1,600 கோடி டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தது. இதற்கு சீனா பதிலடி கொடுத்தது. தற்போதைய வரி விதிப்புக்கு சீனா மீண்டும் பதிலடி கொடுத்தால் 26,700 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால், சீனா மீண்டும் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: