தங்கம், வெள்ளி விலை ஏற்றம்

புதுடெல்லி : தங்கத்தின் விலை ரூ.10ம் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20ம் அதிகரித்து விற்கப்பட்டது. பண்டிகை நாட்களைெயாட்டி நகைக் கடை உரிமையாளர்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டினர். அதே நேரம் உலகளவில் தங்க மார்கெட் வலுவிழந்தது. இதனால் விலை அதிகமாக உயரவில்லை.  நேற்றைய முன்தினம் தங்கத்தின் விலை ரூ.180 உயர்ந்தது.

நேற்று 10 கிராம் சுத்த தங்கம் விலை ரூ.10 உயர்ந்து ரூ.31,610க்கு விற்கப்பட்டது. 1 சவரன் விலை மாற்ற மின்றி ரூ.24,500க்கு விற்கப்பட்டது. நாணய தயாரிப்பாளர்களின் வாங்கும் ஆர்வம் காரணமாக வெள்ளி நாணயத்தின் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.37,700க்கு விற்கப்பட்டது. வாரச் சந்தையில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.110 அதிகரித்து ரூ.37,305 ஆக இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: