திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் பயமுறுத்திய பிளாட்பாரம் பயணிகள் புகாரால் சீரமைப்பு

திருமங்கலம்: சேதமடைந்து காணப்பட்ட திருமங்கலம் ரயில்வே ஸ்டேசன் பிளாட்பாரங்களை புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் பிளாட்பாரங்கள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் ரயில்களில் ஏற வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் பிளாட்பார நடைபாதைகளில் செல்லும் போது தடுமாற வேண்டியிருந்தது. இதனால் திருமங்கலத்தில் ரயில்வே பிளாட்பாரங்களை சீரமைக்க வேண்டும் என பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் சேதமடைந்த பிளாட்பாரங்களை அகற்றிவிட்டு புதிதாக பிளாட்பாரங்களில் கற்கள் பதிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதன் மூலமாக முன்பு இருந்ததைவிட  சற்று உயரம் அதிகமானதாக பிளாட்பாரங்கள் அமைகின்றன. முதலாவது பிளாட்பார நடைபாதையில் துவங்கியுள்ள இந்த பணிகள் விரைவில் இரண்டாவது பிளாட்பார பாதையிலும் துவங்கும் என ரயில்வே அதிகாரிகள்  தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: