ஹைவேவிஸில் நிரம்பி வழியும் அணைகள்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சின்னமனூர்: ஹைவேவிஸ் மலைப்பகுதியிலுள்ள அணைகள் நிரம்பி உள்ளதால், அவற்றை காண வரும் சுற்றலாபயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. பேரூராட்சியின் கீழ் 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் ஏலம், காப்பி, மிளகு, தேயிலை போன்ற பணப்பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.  ஊட்டி, கொடைக்கானலை மிஞ்சும் வகையில் இயற்கை வளங்களுடன் சுற்றுலா தளங்கள் உள்ளன.

இங்குள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கின்றன.  2008ல் இப்பகுதியை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் இங்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை காரணமாக, இப்பகுதிகளில் உள்ள ஹைவேவிஸ், தூவானம், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு ஆகிய அணைகள் நிரம்பி காணப்படுகிறது. இவற்றை காண தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: