தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்கமாக விளங்குகிறது : ஐ.நா.பொதுக்குழுவில் சையது அக்பருதீன் குற்றச்சாட்டு

நியூயார்க் :  ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு அருகில் உள்ள நாடு சொர்க்கமாக விளங்குவதாக ஐ.நா. சபையில் பாகிஸ்தான் மீது இந்தியா மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா.பொதுக்குழுவில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் ஜெனிவாவில் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தலிபான்கள், லஷ்கர் ஐ தோய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் சொர்க்கமாக திகழ்வதாக மறைமுகமாக குற்றம் சாட்டினார். ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தவும் வன்முறையில் ஈடுபடவும் அண்டை நாடு நிதி உதவி செய்வதாகவும் குற்றம் சாட்டிய அவர், தீவிரவாத குழுக்கள் போதை பொருட்களை கடத்துவதோடு ஆப்கானிஸ்தானின் வளங்களையும் கொள்ளையடிப்பதாக விமர்சித்தார்.

Advertising
Advertising

இதைத் தடுத்து நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அதிக கஞ்சா விளைவதாகவும் இவற்றை கடத்துவதன் மூலம் ரூ.7000 கோடி அளவிற்கு தலிபான்களுக்கு வருவாய் கிடைப்பதாகவும் கூறினார்.  தலிபான்களுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கும் போதை பொருள் கடத்தலையும் இதற்கு உதவும் மற்ற தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஐநா செயலற்று இருப்பதாகவும் சையது சாடினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: