கங்கை ஆறு தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு இதுவரை ரூ.21,000 கோடி ஒதுக்கீடு : பிரதமர் மோடி

லக்னோ: இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வாரணாசி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 550 கோடி ரூபாய் மதிப்பீல் பல்வேறு நலதிட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, கங்கோத்ரியில் இருந்து கங்கா சாகர் வரை கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு இதுவரை 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வாரணாசி நகரம் கடந்த நான்காண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சியை தெளிவாக காண முடிகிறது என்றும், வாரணாசி நகரின் மேலே செல்லும் மின்கம்பிகள் எல்லாம் மாற்றப்பட்டு தரைக்கு அடியில் செல்லும் கேபிள்களாக மாற்றப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

வாரணாசிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 லட்சத்தில் இருந்து தற்போது 21 லட்சமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இங்குள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கிந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இதேபோல் பழம்பெருமை வாய்ந்த காசி நகரத்தை அதன் பாரம்பரிய சிறப்பு மாறாமல் நவீனப்படுத்த வேண்டும் என்பது தமது குறிக்கோள் என்றும், கடந்த நான்காண்டுகளில் அந்த திட்டமும் நிறைவேறியுள்ளது என்றும் மோடி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: