14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயம்

டமாஸ்கஸ் :  சிரியாவில் 14 பேருடன் மாயமான தங்கள் நாட்டு போர் விமானத்தை ரஷியா தீவிரமாக தேடி வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு ஆதரவாக ரஷியா படைகள் போரிட்டு வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் சிரியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில் 14 பேருடன் ரஷியாவின் Il-20 என்ற கண்காணிப்பு விமானம் ஒன்று சிரியா எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. பின்னர் நேற்று இரவு சிரியாவின் ஹிமியம் விமானப்படை தளத்திற்கு திரும்பியது. சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35கிமீ தொலைவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் வந்த போது திடீரென விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டு காணாமல் போனது.

இந்நிலையில்  Latakia என்ற இடத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது சிரியாவை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இதையடுத்து விமானம் மாயமாகி விட்டதாகவும் ரஷியா ராணுவம் தெரிவித்துள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானத்தை தேடும் பணியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. போர் விமானம் சுட்டு  வீழ்த்தப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் ரஷ்ய விமானத்தை தாங்கள் தாக்கவில்லை என்று அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: