×

வட கொரியாவிற்கு எதிரான தடைகளை மதிக்காமல் உலக நாடுகளை ரஷியா ஏமாற்றுகிறது : நிக்கி ஹாலே

மாஸ்கோ : வட கொரியாவிற்கு எதிராக விதித்த தடைகளை மதிக்காமல் உலக நாடுகளை ரஷியா ஏமாற்றி விட்டதாக ஐ.நாவுக்கான அமேரிக்கா தூதர் நிக்கி ஹாலே குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இது குறித்து உரையாற்றிய நிக்கி ஹாலே, வட கொரியாவின் திட்டங்களுக்கு
உதவி செய்யும் வகையில் சட்டவிரோதமான முறையில் தேவையான எரி பொருட்களை கடல் வழியாக ரஷியா அனுப்பி வைத்தது என்றுதெரிவித்தார். மேலும் பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஆண்டு வெளியிட்ட கருப்பு பட்டியலில் வடகொரியாவைச் சேர்ந்த முக்கிய பிரமுகரின் பெயர்கள் இடம் பெற்று இருந்ததாகவும் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற ரஷியா மறுப்பு தெரிவித்ததாவும் அவர் கூறியிருக்கிறார்.

அது தவிர தனது தவறுகளை மறைப்பதற்காக ஐ.நாவின் அறிக்கையில் மாற்றம் செய்வதற்கு ரஷியா அழுத்தம் கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார். மாஸ்கோவில் இதற்கு பதில் அளித்த ஐ.நாவுக்கான ரஷியா தூதர்  Vassily Nebenzia , ஐநாவின் அறிக்கையில் திருத்தம் செய்யும் படி ரஷியா தரப்பில் எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நிக்கி ஹாலே பேசி வருகிறார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் வர்த்தகம் செய்வது விதிமீறல் ஆகாது என்றும் அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Russia cheats the worlds without respecting the sanctions against North Korea: Nicky Hall
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...