×

தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பயிற்சியா ? : ஜப்பானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா

பெய்ஜிங் : தென் சீனக் கடல் பகுதியில் ஜப்பான் ராணுவ பயிற்சி மேற்கொண்டதை தொடர்ந்து அமைதிக்கு சேதம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீன கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருவதற்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. எனினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி ராணுவ தளத்தை சீனா அமைத்து வருகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் மலேசியா, பிலிப்பைன்ஸ் வியட்நாம் போன்ற நாடுகள் தென் சீனக் கடல் பகுதியில் தங்களுக்கும் உரிமை இருப்பதாக தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் முதல்முறையாக அந்த பகுதியில் ஜப்பான் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது.நீர்மூழ்கி கப்பல்கள் , போர் கப்பல்கள் , ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானின் இந்த நடவடிக்கை சீனாவை ஆத்திரம் அடைய வைத்துள்ளது. ராணுவ பயிற்சிகள் மேற்கொள்வதால் தென் சீனக் கடல் பகுதியில் நிலவும் அமைதிக்கு சேதம் ஏற்படலாம் என்று ஜப்பானை மறைமுகமாக எச்சரித்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Military training in South China Sea China warns Japan
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...