பழவேற்காட்டில் நிரந்தர துறைமுகம் அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

சென்னை: பழவேற்காட்டில் முகத்துவராத்தை சீரமைத்து தூண்டில் வளைவுடன் நிரந்தர துறைமுகம் அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் 2வது நாளாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் அமைந்துள்ள கடல் முகத்துவாரத்தை நம்பி 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழவேற்காடு ஏரியும், கடலும் சேரும் முகத்துவாரப் பகுதி கடந்த 10 ஆண்டுகளாக தூர் வாராததால் மீனவர்கள் சிரமம் அடைந்துள்ளனர். கடலுக்குச் செல்லும் போது முகத்துவார பகுதியில் உள்ள மணல் திட்டில் படகுகள் சிக்கி சேதம் அடைவதாகவும், சில நேரங்களில் மீனவர்களின் படகுகள் கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து கடந்த ஆண்டு தமிழக அரசு பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார ரூ.27 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனை கண்டித்து பழவேற்காட்டில் நேற்று மீனவர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதனை தொடர்ந்து 2வது நாளாக இன்று மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மீனவங்கள் தங்களது படகுகளை கரையில் நிறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் இங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டருந்தனர். இந்நிலையில் துறைமுகம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: