×

தாய்லாந்தில் கடலில் தத்தளித்த 14 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு

தாய்லாந்து : தாய்லாந்தில் கடலில் தத்தளித்த சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தாய்லாந்தில் உள்ள கோ பை பை ((Koh phi phi)) என்ற தீவுக்கு 14 பேர் கொண்ட குழுவினர் கடல் வழியாக சுற்றுலாவிற்கு சென்றனர். அப்போது திடீரென வீசிய புயல் காற்றில் அந்த படகு சிக்கியது. சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் எழும்பிய அலைகளால் படகு சேதம் அடைந்தது. இதனால் 14 பேரும் கரை சேர முடியாமல் கடலில் தத்தளித்தனர்.

இதனால் பயந்து போன சுற்றுலாக் குழுவினர் தங்களைக் காப்பாற்ற வேண்டி கரைக்கு சமிக்ஞை அனுப்பினர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புக் குழுவினர் கடலில் உயிருக்குப் போராடியவர்களை பத்திரமாக மீட்டனர்.முன்னதாக தென் சீனக் கடலில் உருவாகியுள்ள மன்க்ஹுட் புயல் தாக்கத்தின் காரணமாக வியாழக்கிழமை வரை அந்தமான் கடலில் அதிக உயரத்தில் அலைகள் எழும்பும் என்று ஞாயிறன்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shipwrecked at sea safely rescue 14 tourists in Thailand
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்