பண மோசடி வழக்கில் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

டெல்லி: கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீது அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தனது நண்பரும் ஷர்மா டிரான்ஸ்போர்ட் அதிபருமான எஸ்.கே. ஷர்மாவுடன் சேர்ந்து பேருந்துகள் மூலம் ஹவாலா முறையில் கோடிக் கணக்கில் டெல்லிக்கு பணத்தை அனுப்பி வைத்ததாகவும் வரி ஏய்ப்புச் செய்ததாகவும் வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

வருமான வரித் துறை இந்த வழக்கு தொடர்பாக முன்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் பிறருக்கு அமலாக்கத் துறை சீக்கிரமே நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக அமைச்சர் சிவக்குமார், கர்நாடக பவனில் பணியாற்றிவரும் ஊழியர் அனுமந்தய்யா, ஷர்மா டிரான்ஸ்போர்ட் ஊழியர் ராஜேந்திரா சிவகுமாரின் தொழில் கூட்டாளி சச்சின் நாராயண் ஆகியோர் மீது அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் வருமான வரித் துறை வட்டாரம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர், பெங்களூரு மற்றும் டெல்லியில் ஒரு பெரிய நெட்வொர்கையே வைத்து கருப்புப் பணத்தை சட்டத்துக்குப் புறம்பாக பறிமாற்றம் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: