×

உலகளவில் 2025ம் ஆண்டில் 12 துறைகளின் வேலைவாய்ப்பை இயந்திரங்கள் தட்டி செல்லும் : ஆய்வறிக்கையில் தகவல்

ஜெனீவா : வரும் 2025ம் ஆண்டில் சுமார் 12 துறைகளின் வேலைவாய்ப்பை இயந்திரங்கள் தட்டிச் சென்று விடும் என உலக பொருளாதார மன்றம் தமது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. world economic forum நடத்திய எதிர்கால வேலை வாய்ப்புகள் என்ற ஆய்வறிக்கையில் உலகளவில் 2022ம் ஆண்டில் 12 துறைகளில் 54% அதிகமான இந்திய பணியாளர்களின் வேலை வாய்ப்பு மறு சீரமைக்கப்பட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் அனைத்து நிறுவனங்களும் கிட்டத்தட்ட முழுநேர பணியாளர்களை குறைத்து விட்டு தானியங்கி இயந்திர சேவைகளை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனாலும் புதிய பணிகள் வேலை வாய்ப்புகளை வழங்கும் என கருதப்படுகிறது. அதிவேக மொபைல் இணையதளம், ரோபோக்கள், ஆட்டோமேஷன் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றால் 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கு இடையில் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உற்பத்தி, சேவைகள் மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய 12 தொழில் துறைகளில் மனிதர்களின் பங்களிப்பு 71% ஆக இருக்கிறது. 2025ம் ஆண்டுக்குள் மனிதர்களின் பங்களிப்பு 48% ஆக குறையும் என்றும் 52% பணிகளை இயந்திரங்கள் செய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Worldwide, the machinery of 12 departments will slip for employment in 2025: the report is reported
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்