ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை; அவர் வெளிநாடு செல்ல இனிமேல் அனுமதிக்கக் கூடாது  என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் வழக்கை வேண்டுமென்றே கார்த்தி சிதம்பரம் இழுத்தடித்து வருவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் 35 நாள் பயணமாக வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரம் அனுமதி கோரியுள்ளார்.

முன்னதாக  நேற்று கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கார்த்தி சிதம்பரம் அமலாக்கப்பிரிவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அப்படி இருந்தும் டெல்லி நீதிமன்றம் அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை தரப்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே அவரை கைது செய்வது ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்படும் அமலாக்கப்பிரிவின் இதுபோன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமது மகளை கல்வி நிறுவனத்தில் சேர்க்க வெளிநாடு செல்ல வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று கார்த்தி சிதம்பரம் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: