நிலவுக்கு சுற்றுப்பயணம் செல்ல ஜப்பானை சேர்ந்த யுசாகு மேஸவா தேர்வு : ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிப்பு

நியூயார்க் : நிலவுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள முதல் நபராக ஜப்பானை நாட்டை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் முதன் முதலாக நிலவு சுற்றுப்பயணம் செல்லும் நபராக ஜப்பானை சேர்ந்த யுசாகு மேஸவா என்ற கோடீஸ்வரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரபல ஆடை நிறுவனமாக ஸோஸோவின் நிறுவனரான இவர் ஜப்பானின் கோடீஸ்வரர் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலவுக்கு செல்லவுள்ள முதல் நபராக யுசாகு மேஸவா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார். இதற்காக யுசாகு கொடுத்துள்ள தொகையானது ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவும் என்றும் மஸ்க் கூறியுள்ளார். இந்த சுற்றுப்பயணமானது நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் யுசாகு மேஸவா, அவருடன் எட்டு வீரர்களையும் தம் செலவில் அழைத்து செல்ல உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: