×

ஜெர்மனியில் பயணம் செய்யும் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் !!

பெர்லின் : உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் ஓடத் தொடங்கியது.  பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியின் வடக்குப்  பகுதியில் உள்ள குசாவன் (Cuxhaven)  நகரில் தனது பயணத்தை தொடங்கியது. இந்த ரயில் மணிக்கு 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லக் கூடியது. இந்த ரயில் கடந்த திங்களன்று Bremervorde ரயில் நிலையத்தில் இருந்து முதல் பயணத்தை மேற்கொண்டது.

முன்னதாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் என்ஜினை பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் உருவாக்கியது. இந்த புதிய வகை ரயில் என்ஜினில் ஹைட்ரஜன் ‘டேங்க்’ அதன் கூரை மீது அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் எரிவாயு செல்கள் மின்சக்தியாக மாறி ரயில் என்ஜினை இயக்குகிறது. இதன் மூலம் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில் என்ஜினை தயாரித்த பெருமையை ஆல்ஸ்டம் நிறுவனம் பெற்றது.

இந்த ரயில் என்ஜின் ஜெர்மனியில் ஓடும் ‘கொராடியா லின்ட்’ என்ற பயணிகள் ரயிலில் பொறுத்தப்பட்டது. காற்று மாசு ஏற்படுத்தும் டீசல் ரயில்களுக்கு பதிலாக சுற்றுசூழலுக்கு உகந்த ஹைட்ரஜன் ரயில்களை அதிகளவில் இயக்கவும் ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. 2021ம் ஆண்டுக்குள் 14 புதிய ஹைட்ரஜன் ரயில்களை ஆல்ஸ்டம்  நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாற்று ஏற்பாடு செய்வதில் நிபுணர்கள் தீவிரம் காட்டி ஹைட்ரஜன் என்ஜினை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hydrogen rail, Germany, air pollution
× RELATED ஜன.17 அரசு விடுமுறை என்பதால் பிப்.4-ம்...