இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற பின்னரும் இந்தியா குறித்த கொள்கையை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளவில்லை: வி.கே.சிங் குற்றசாட்டு

டெல்லி: பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பின்னரும் இந்தியா குறித்த கொள்கையை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வி.கே.சிங் பாகிஸ்தான் குறித்த கொள்கையில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்றும், பேச்சுவார்த்தைக்கான சூழலை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால் இந்தியா குறித்த கொள்கையை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளவில்லை என்று சிங் விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த நிலைப்பாட்டிற்கு பாரதிய ஜனதா அரசே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. நட்புக்கரத்தை நீட்டும் போதும் வெறுப்பை உமிழும் நாட்டுடன் மென்மையான நிலைப்பாடு பயன்தராது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. தொடக்கத்திலிருந்தே உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தால் இந்தியாவிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது என்பது காங்கிரசின் கருத்தாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: