5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரம்: பேஸ்புக் நிறுவனத்திற்கு சி.பி.ஐ. கடிதம்

டெல்லி: இந்தியர்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த விவகாரம் தொடர்பாக பேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிட்கா நிறுவனங்களுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேர் பயன்படுத்தும் பேஸ்புக்கில் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக சில மாதங்களுக்கு முன் எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் குளோபல் சயின்ஸ் ரிசர்ச் என்ற நிறுவனத்தின் மூலம் 5 கோடி பேரின் தகவல்களை திருடியது உறுதிசெய்யப்பட்டது.

இந்த தகவல்கள் அனைத்தும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம் அதற்காக மன்னிப்பும் கோரியது. இந்த  நிலையில் தகவல்களை இந்த நிறுவனங்கள் எவ்வாறு சேகரித்தன என்பது குறித்து விளக்கமளிக்க வலியுறுத்தி பேஸ்புக் நிறுவனத்திற்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. மற்ற இரண்டு நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ள சிபிஐ முதற்கட்ட விசாரணைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: