×

சீன இறக்குமதி பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி : அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் : சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் வலுத்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதிப் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி வருகின்றன. அமெரிக்கா புதிதாக வரிகளை விதித்தால் பதிலடியாக அந்நாட்டுப் பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படும் என சீனா எச்சரித்திருந்தது.

இந்நிலையில், சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் வரி விதித்துள்ளது. சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவுக்கான இந்த வரி விதிப்பு செப்டம்பர் 24ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரியில் இருந்து இந்த வரிவிதிப்பானது 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள், மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பாக நியாயமற்ற கொள்கைகளையும், நடைமுறைகளையும் சீனா பின்பற்றுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நியாயமற்ற நடைமுறைகளை கைவிட்டு அமெரிக்க நிறுவனங்களை உரிய முறையில் நடத்துமாறு வலியுறுத்தியும் சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது தமது நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinese goods,President Trump,Taxes,Trade war
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...