நைஜீரியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு

அபுஜா : நைஜீரியா நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நைஜீரியாவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது.

மேலும் 8 மாநிலங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நான்கு மாநிலங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தேசிய அவசர மேலாண்மை நிறுவனம் அறிவித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100- க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும் விரைவில் மீட்பு பணிகள் தொடங்கப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நைஜீரியா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: