கத்தியால் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த பள்ளி மாணவர்கள் நான்கு பேர் கைது: 24 மணி நேரத்தில் பிடித்த ரயில்வே போலீசார்

சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வாலிபரை வழிமறித்து கத்தியால் வெட்டி செல்போன் பறித்த வழக்கில் 4 பள்ளி மாணவர்களை 24 மணி நேரத்தில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகரை சேர்ந்தவர் கலைவாணன்(28). இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து மின்சார ரயில் மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது 2 வாலிபர்கள் கலைவாணனை கத்தி முனையில் வழிமறித்து பணம் பறிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கலைவாணன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் அவர்கள் விடாமல் விரட்டி ெசன்று தலையில் ஓங்கி வெட்டினர். இதில் நிலை தடுமாறி கலைவாணன் கீழே விழுந்தார். அப்போது அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டு மாயமாகினர். இந்த சம்பவம் குறித்து பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மாம்பலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் தண்டவாளத்தின் அருகே கிடந்த கலைவாணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து கலைவாணன் கொடுத்த புகாரின் படி மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க ரயில்வே டிஎஸ்பி ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது 4 சிறுவர்கள் கலைவாணன் செல்லும் ேபாது அவரை பின் தொடர்ந்து சென்றது தெரியவந்தது.

உடனே 4 சிறுவர்களின் புகைப்படங்களை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் சைதாப்ேபட்டையை சேர்ந்த 4 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், பட்டாகத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: