சில்லி பாயின்ட்

* ‘‘இன்னும் ஒரு சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென நினைக்கிறேன். ஹாங்காங்கை 9 அல்லது 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்க வேண்டும், புதிய பந்தில் மேலும் சிறப்பாக பந்துவீசியிருக்க வேண்டும். எதிர்பார்த்த அளவுக்கு புதிய பந்து ஸ்விங் ஆகவில்லை. இதை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளோம். வலைப்பயிற்சியில் எங்களின் தவறுகளை முழுமையாக தீர்ப்போம். எங்களின் முழுமையான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும். எனவே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூன்றிலும் முழு திறமையை வெளிப்படுத்துவோம். துவக்கத்திலேயே விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்துவதே எங்களின் ஆட்ட சூட்சமம்’ என இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஷ் அகமது கூறி உள்ளார்.

* தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லாவுக்குப் பிறகு  குறைவான ஒருநாள் போட்டியில் 2,000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஷ் பெற்றுள்ளார். ஹாங்காங்குக்கு எதிரான முதல் போட்டியில் அவர் 33 ரன் எடுத்ததன் மூலம் 45 போட்டியில் 2,000 ரன்னை கடந்துள்ளார். அம்லா 40 போட்டியில் 2,000 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

* டேவிஸ் கோப்பை டென்னிசின் உலக குரூப் பிளே ஆப் சுற்றுப் போட்டியில் செர்பியாவிடம் 0-4 என்ற கணக்கில் இந்திய அணி தோற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: