கரீபியன் பிரீமியர் லீக் டி20 : டிரின்பாகோ சாம்பியன்

தரோபா: கரீபியன் பிரீமியர் லீக் டி20யின் பரபரப்பான இறுதிப்போட்டியில் கயானா வாரியர்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 3வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) டி20 சீசன் 6 கோலாகலமாக நடந்தது.  ஆப்ரிக்காவின் 6 கிளப் அணிகள் மோதிய இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு டிவைன் பிராவோ தலைமையிலான நடப்பு சாம்பியன் டிரின்பாகோ நைட் ரைடர்சும், கயானா வாரியர்ஸ் அணியும் முன்னேறின. தரோபாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த கயானா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரோன்சி 44 ரன் விளாசினார். டிரின்பாகோ அணியின் பைர்ரே 3, டிராவோ 2, அலிகான், பவாத் அகமது, நரைன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய டிரின்பாகோ அணிக்கு மெக்கல்லம் (39), ராம்தின் (24) நல்ல தொடக்கத்தை தந்தனர். தொடர்ந்து முன்ரோ அதிரடி அரைசதம் அடிக்க அந்த அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்ரோ 68 ரன் (39 பந்து), இன்கிராம் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் டிரின்பாகோ தொடர்ந்து 2வது முறையாக சிபிஎல் டி20 கோப்பை வென்று அசத்தியது. இந்த அணி இதுவரை 2015, 2017, 2018 என 3 முறை சாம்பியன் ஆகி உள்ளது. டிரின்பாகோ அணியின் பைர்ரே ஆட்ட நாயகன் விருதும், முன்ரோ தொடர் நாயகன் விருதும் வென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: