அமெரிக்காவில் புளோரன்ஸ் புயல் பாதிப்பு : ஆறுகளில் வெள்ளப்பெருக்கு வில்மிங்டன் நகரம் துண்டிப்பு

வில்மிங்டன்: அமெரிக்காவில் புளோரன்ஸ் புயல் பாதிப்பால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து துறைமுக நகரமான வில்மிங்டன் துண்டிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக மையம் கொண்டுள்ள புளோரன்ஸ் புயலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். கரோலினா உள்ளிட்ட மாகாணங்களில் புளோரன்ஸ் புயலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்ெபருக்கை அடுத்து துறைமுக நகரமான வில்மிங்டன்னுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாதவகையில் கடந்த வெள்ளி முதல் பல பகுதிகளில் 75 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பகுதிகளில் வசித்துவரும் ஆயிரக்கணக்கானோர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு மிகவும் அவதியுற்று வருகின்றனர். நியூ ஹனோவர் கவுன்டி மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்க திட்டமிட்டு வருவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். லம்பர் ரிவர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அங்குள்ள மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.புளோரன்ஸ் புயலால், கரோலினா, வெர்ஜீனியா உள்ளிட்ட 6 மாகாணங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு கரோலினா மாகாணத்தில் வரலாறு காணாதவகையில், புளோரன்ஸ் புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர். மழை பாதிப்பில் தவித்துவரும் மக்களை கண்டுபிடித்து அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக 13 ஆயிரத்து 500 ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் வசித்துவரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். கேப் பியர் மற்றும் லிட்டில் ஆற்றங்கரைகளில் வசித்துவரும் 7,500 பேர் உடனடியாக வெளியேற அறிவறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: