×

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 10 வீரர்கள் பரிதாப பலி : பதிலடியில் 42 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானில் போலீஸ் மற்றும் ராணுவ தளங்கள் மீது நேற்று தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 10 பேர் உயிரிழந்தனர். வீரர்களின் எதிர்தாக்குதலில் 42 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக அவர்கள் நடத்திவரும் தாக்குதல்களில் பொதுமக்கள் அதிகளவில் கொல்லப்படுகின்றனர். அரசு தரப்பில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்பட்டுள்ள போதிலும், தங்களது தாக்குதல்களை தலிபான்கள் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பத்கிஸ் மாவட்டத்தின் வடமேற்கில் மாவட்ட தலைநகர் குவாலா இ நோ பகுதியில் நேற்று தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், போலீஸ் கமாண்டர் அப்துல் ஹகிம் உள்பட 5 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 22 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 16 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல பக்லான் மாகாணத்தின் வடக்குப்பகுதியில், ராணுவ மற்றும் போலீஸ் தளத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ மற்றும் 2 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். ராணுவத்தினர் நடத்திய எதிர் தாக்குதலில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருவேறு பகுதிகளில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆயினும், இந்த பகுதிகளில், பாதுகாப்புப் படையினருக்கு எதிராக தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருவதால், அவர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Afghanistan, Taliban militants, attack
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...