பிரபல டைம் பத்திரிக்கை ரூ.1,380 கோடிக்கு விற்பனை

வாஷிங்டன்: அமெரிக்காவில் மெரிடித் கார்ப்பரேஷனால் விற்பனை செய்யப்பட்ட பிரபல டைம் பத்திரிகையை சேல்ஸ்போர்ஸ் இணை நிறுவனர்களுள் ஒருவரான மார்க்பெனியாப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ரூ.1,380 கோடிக்கு (190 மில்லியன் டாலர்) வாங்கியுள்ளனர்.அமெரிக்காவில் இயங்கி வரும் டைம் பத்திரிகை உலகப் புகழ்பெற்றது. கடந்த 90 ஆண்டுகளாக இயங்கி வரும் டைம் பத்திரிக்கை பல்வேறு முக்கிய நிகழ்வுகள், பயனுள்ள கதைகள், உலகளாவிய உரையாடல்களின் தொகுப்பு என முன்னணியில் இருந்து வருகின்றது. இதன் அட்டைப்படத்தில் இடம்பெறுவது, மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.

 இந்நிலையில் இந்த பத்திரிகை  விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மெரிடித் நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ.1,380 கோடிக்கு (190 மில்லியன் டாலர்) மார்க் பென்னியாப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இந்த பத்திரிகையை வாங்கியுள்ளனர். பென்னியாப், சேல்ஸ்போர்ஸ் நிறுவனர்களின் ஒருவராவார். இது தொடர்பாக மெரிடித் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சிஇஓ வெளியிட்டுள்ள  அறிக்கையில், “டைம் பத்திரிகையின் அன்றாட நடவடிக்கைகள் அல்லது பத்திரிக்கை தொடர்பான முடிவுகளில் பென்னியாப் குறுக்கிடமாட்டார். தற்போதுள்ள நிர்வாக குழுவே வழக்கம்போல் அனைத்து முடிவுகளையும் எடுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க் பெனியாப் கூறுகையில், “சேல்ஸ்போர்ஸ்க்கும் டைம் பத்திரிகையை வாங்கியதற்கும்  எந்த தொடர்பும் இல்லை. உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, வலுவான நிறுவனத்தில் நானும், எனது மனைவியும் முதலீடு செய்துள்ளோம்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: