பூசணிக்காய் விலை சரிவு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் பூசணி விதைப்பில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.கடந்த ஆண்டு போதிய மழையில்லாததால் பூசணிக்காய் விளைச்சல் மிகவும் குறைந்தது. அதன்பின், இந்த ஆண்டில் கடந்த மே மாதம் பெய்த கோடைமழையை தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் பூசணிக்காய் சாகுபடி  அதிகமாக இருந்தது. தென்மேற்கு பருவமழையால், பூசணிக்காய் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இதையடுத்து, பல்வேறு கிராமங்களில் பூசணிக்காய் அறுவடை துவங்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த சிலநாட்களாக பொள்ளாச்சி  மார்க்கெட்டுக்கு பூசணிக்காய் வரத்து சற்று அதிகமாக இருந்தது.

 திருச்சி, அரியலூர் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும், பூசணிக்காய்கள் மார்க்கெட்டுக்கு அதிகளவு கொண்டுவரப்படுகிறது. இதனால், அதன் விலை சரியதுவங்கியுள்ளது. கடந்த மாதம் வரை ஒருகிலோ பூசணிக்காய் ₹20 முதல்  ₹24 வரை என கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.  ஆனால், தற்போது வரத்து அதிகரிப்பால், மொத்த விலை ஒரு கிலோ  ₹8 முதல் ₹10க்கும், சில்லரை விலைக்கு ₹10 முதல் ₹14க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது என வியாபாரிகள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: