கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

கன்னியாகுமரி: கேரளாவில் வெள்ள பாதிப்பை தொடர்ந்து, கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.  கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடல்நடுவே இருக்கும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைகளை  கண்டுகளிக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகிறது. சபரிமலை சீசனில் தினமும் 7 ஆயிரம் பேர் இந்த படகில் சென்று விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளூவர் சிலை அமைந்துள்ள இடத்திற்கும்  சென்று வருகின்றனர். மற்ற நாட்களில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.  

கேரளாவில் ஏற்பட்ட மழைபாதிப்பால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தினமும் 2500 முதல் 3 ஆயிரம் வரைதான் விவேகானந்தர் பாறைக்கு சென்று  வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் நவராத்திரி பூஜையின் போது அதிகரிக்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: