விஜயா, தேனா, பரோடா வங்கிகளை இணைக்க முடிவு

புதுடெல்லி: விஜயா, தேனா, பாங்க் ஆப் பரோடா வங்கிகளை இணைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை வலிமையாக்கும் வகையில் அவற்றை இணைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்கெனவே பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன.  வங்கிகளின் நிதிநிலையில் வராக்கடன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மொத்த வராக்கடனில் 90 சதவீத வராக்கடன் பொதுத்துறை வங்கிகள் சார்ந்தவை.  நிதி நிலையில் பலவீனமாக வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைப்பது பற்றி மத்திய அமைச்சரவையிலும் பரிசீலிக்கப்பட்டது. அப்போது, இணைப்புக்கு சாத்தியமான வங்கிகள் பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகியவை இணைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதன்மூலம் நாட்டின் 3வது பெரிய வங்கியாக பாங்க் ஆப் பரோடா திகழ உள்ளது.  இணைப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், இணைப்பு மூலம் வங்கிகள் வலுவடையும். அவற்றின் கடன் வழங்கல்  தகுதி அதிகரிக்கும். ஊழியர்களை இது பாதிக்காது’’ என்றார்.

நிதிச்சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் கூறுகையில், இணைப்பு நடவடிக்கை குறித்து மேற்கண்ட 3 வங்கிகளின் நிர்வாக குழு ஆலோசனை நடத்தும். வாடிக்கையாளர்களுக்கு வங்கிச்சேவைகளை சிறப்பாக அளிக்க முடியும். இந்த வங்கிகளின் ஊழியர்களின் நலன்களும் பாதுகாக்கப்படும். வங்கி  சீரமைப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன. வராக்கடன்  பிரச்னை வங்கிகளின் வரலாற்றில் இனியும் உருவாகக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: