முட்டை விலை 345 காசாக சரிவு

நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை விலையில் 10 காசுகள் குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை  345 காசாக நிர்ணயிக்கப் பட்டது. புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். மற்ற  மண்டலங்களில் முட்டை விலை விபரம் (காசுகளில்): ஐதராபாத் - 338, மைசூர் - 366, பெங்களூரு - 368, கொல்கத்தா - 427, டெல்லி - 383, மும்பை - 401, விஜயவாடா - 376 காசுகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: