அறப்போர் களத்துக்கு ஆயத்தம் ஆவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: தேர்தல் களம் அழைப்பதால் அறப்போர் களத்துக்கு ஆயத்ததம் ஆவோம் என்று  தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:நம் உயிருக்கு நிகரான - நம் உயிரினும் உயர்வான தலைவர் - என்றும் நம் உயிருடன் கலந்திருக்கும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் நாளினை, தமிழ்ச் செம்மொழி நாளாகக் கொண்டாடிட வேண்டும் என்ற அறிவிப்பு,  முப்பெரும் விழா பந்தலைக் கடந்து எழுந்த கரவொலியால் தமிழர்களின் செவிவழியே சேர்ந்து, இதயத்தில் நிறைந்துள்ளது. வாழ்நாளெல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் நிலம் செழிக்க தன் பேனாவால் உழுது உழுது, மத்திய  அரசின் மூலமாக செம்மொழித் தகுதியினைப் பெற்றுத் தந்த நம் தலைவரை நினைவுகூர்ந்திட, இதைவிட தக்க சிறப்பான வாய்ப்பு இல்லை என்பதால்தான் ஜூன் 3ம் நாளினை “தமிழ்ச் செம்மொழி நாளாகக்” கடைப்பிடிக்க அன்பு  வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

‘முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு, அதன் சார்பில் கல்வி உதவித் தொகை, மருத்துவ நிதியுதவி ஆகியவை அளிக்கப்படுவதுடன், இளைய தமிழ்ச் சமுதாயம் ஏற்றம் பெறும்  வகையில் ஐ.ஏ.எஸ். அகாடமி, இளம் சாதனையாளர் விருது, திராவிட படைப்பாளிகள் விருது, ஒன்றியம் தொடங்கி ஊராட்சி வரை சிறப்பாகச் செயல்படும் கழக நிர்வாகிகளுக்கு விருது, சமூக அக்கறையுடன் செயல்படும்  கழகத்தினருக்கு சிறப்பு விருது ஆகியவை வழங்கிடவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதை, முப்பெரும் விழா மேடையில் அறிவித்தேன்.தமிழக மக்கள் கழகத்தைப் பார்க்கும் நிலையில், கழகத் தலைவர் என்ற முறையில் தொண்டர்களாக உங்களை நான் பார்க்கிறேன். களம் அழைக்கிறது; ஜனநாயக முறையிலான தேர்தல் களம். அதற்கு முன்பாக அமைதியாக நாம் பங்கேற்கிற அறப்போராட்டக் களம். ஆம், செப்டம்பர் 18. (இன்று) தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் அறப்போர். இன்றைய அறப்போர்க் களத்திற்கு ஆயத்தமாவோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: