1000 வீடுகளுக்கு பா.ஜ சார்பில் குப்பை சேகரிக்கும் கூடை

சென்னை: தூய்மையேஉண்மையான சேவை என்ற திட்டத்தின்  ஒரு பகுதியாக சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் தொடக்க விழா நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தொழில் பிரிவு தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினரும், பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளருமான செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் 100 பெண்களுக்கு குப்பை சேகரிக்கும் கூடைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செம்பாக்கம் நகர தலைவர் பிரபாகரன், மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர் பேராசிரியர் நந்தகுமார், பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: