ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கை வெளியேற்றம்

அபுதாபி: ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 250 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 158 ரன்களில் இலங்கை ஆல் அவுட்டானது. அதனால் தொடரில் இருந்து இலங்கை வெளியேறியது.அபுதாபியில் நேற்று நடந்த போட்டியில் ‘பி‘ பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே முதல் லீக் போட்டியில் வங்கதேசத்திடம் இலங்கை அணி தோல்வி அடைந்த நிலையில் இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை களமிறங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் முகமது ஷெசாத், இஷானுல்லா நல்ல தொடக்கத்தை தந்தனர். மலிங்காவின் வேகம் எடுபடாத நிலையில், சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயா இலங்கைக்கு கைகொடுத்தார். ஷெசாத்(34) விக்கெட்டை கைப்பற்றிய அவர் இஷானுல்லாவையும்(45) வெளியேற்றினார். 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 249 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.வெற்றிக்கு தேவை 250 ரன்கள் எனும் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் எதிரணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். உப்பல் தரங்காவால் மட்டுமே 36 ரன்கள் எடுக்க முயன்றது. திசரா பெராரா 28 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களுடன் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடைபோட்டனர்.ஆப்கானிஸ்தான் அணியின் குலாப்தீன் நயீப், முஜிபுர் ரகுமான், முகமது நபி, ரஷீத்கான்  ஆகிய 4 பவுலர்களும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 2 வீரர்கள் ரன் அவுட் ஆகினர்.42.1 ஓவரில் இலங்கை அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதையடுத்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: