பர்சில் இருந்த சாம்சங் கேலக்சி நோட் 9 தீப்பிடித்து எரிந்ததாக அமெரிக்காவில் பெண் புகார்

அமெரிக்கா: அமெரிக்காவில் பர்சில் இருந்த போது சாம்சங் கேலக்சி நோட் 9 தீப்பிடித்து எரிந்ததாக கூறி பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். டயான் சுங் என்ற ரியல் எஸ்டேட் முகவர் லிப்டில் சென்ற போது தனது கையில் வைத்திருந்த சாம்சங் கேலக்சி நோட் 9 அதிக சூடாக இருந்ததால் கைபையில் வைத்ததாகவும், அப்போது பையில் இருந்து அதிக சத்தத்துடன் அடர்த்தியான புகையும் வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.

தீப்பிடித்து எறிந்த நோட் 9-ஐ எடுக்க முயன்ற போது தமது கையில் ஒருபகுதியில் தீ சுட்டதோடு பையில் இருந்த பொருட்களும் எரிந்து போனது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் லிப்டில் தனியாக இருந்த போது ஏற்பட்ட புகைமூட்டத்தால் ஆபத்தான சூழலை எதிர்கொண்டதாக கூறி கேலக்சி நோட் 9-க்கு தடை விதிக்க வேண்டும் என்று சாம்சங் நிறுவனத்திற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே செல்போன் பேட்டரி தீப்பிடித்த பிரச்சனையில் நோட் 7 விற்பனையை சாம்சங் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: